தமிழ்சினிமாவில் தொடரும் ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’ முறை..!

ரிலாக்ஸாக ஒரு முன்னோட்டத்தை பார்த்துட்டு அப்புறமா விஷயத்துக்கு வருவோம்.. இயக்குனர் பாலாவின் முதல் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். இரண்டாவது படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். மூன்றாவது படமான பிதாமகனில் விக்ரம், சூர்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்தார்கள்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோவான விஜய் சேதுபதியும் அடுத்து அவர் இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தின் ஹீரோவான விஷ்ணுவும் இணைந்து தான் தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், தனது முதல் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய விமலையும் மூன்றாவது படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயனையும் கதாநாயகர்களாக வைத்துத்தான் தனது நான்காவது படமான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வை இயக்கினார் டைரக்டர் பாண்டிராஜ்.

இதற்கு ஒரே காரணம் தங்களுக்கு தமிழ்சினிமாவில் ஒரு முகவரி தந்த இயக்குனர்கள் மீண்டும் தங்களது படங்களில் நடிக்க அழைக்கும்போது என்ன ஏது என்று காரணம்கூட கேட்காமல் ஓடிவந்து நடித்து கொடுக்கிறார்கள் சில நடிகர்கள். ஒருவகையில் இதை ‘குருபக்தி’ என்றுகூட சொல்லலாம்.. இயக்குனர்களுக்கோ தங்களுக்கு இரட்டைக்குழல் துப்பாக்கி கிடைத்த உற்சாகம்.

இதே பாணியைத்தான் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் தனது அடுத்த படத்திற்கு பின்பற்ற உள்ளார். அவரது முதல்பட நாயகன் விஜய் சேதுபதி, இரண்டாவது படம் மூலம் தற்போது நாயகனாக மாறியுள்ள பாபி சிம்ஹா இருவரையும் வைத்து தான் அடுத்து தனது படத்தை இயக்கவிருக்கிறாராம். அதுமட்டுமல்ல, இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

‘இரட்டைக்குழல் துப்பாக்கிDouble actionஇடம் பொருள் ஏவல்எஸ்.ஜே.சூர்யாகார்த்திக் சுப்புராஜுகேடி பில்லா கில்லாடி ரங்காசீனு ராமசாமிசூர்யாதென்மேற்கு பருவக்காற்றுநீர்ப்பறவைபாண்டிராஜ்பாபி சிம்ஹாவிக்ரம்விஜய் சேதுபதிவிஷ்ணு