“சயீப் அலிகான் அமெரிக்கா போக கூடாது” – எம்.எல்.ஏ புகார்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயீப் அலிகான். தற்போது ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளார் சயீப். தானேவை சேர்ந்த எம்.எல்.ஏவான பிரதாப் சர்நாயக் என்பவர் இவருக்கு எதிராக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் அல்லது புகார் மனு தான் சிக்கலுக்கு காரணம்.

விஷயம் இது தான்.. வரும் ஏப்ரல் 23முதல் 27 வரை அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஒரு விருது வழங்கும் விழாவில் சயீப் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆனால் அந்த தேதிகளுக்குள்தான் சயீப் வாக்களிக்கவேண்டிய தொகுதிக்கான லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஒரு முன்னணி நட்சத்திரம், அதுவும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரு நடிகர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ஓட்டுச்சாவடிக்கு செல்வதை விட்டுவிட்டு விழாவில் கலந்துகொள்ள அமெரிக்க செல்வது தவறு என்றும் அதை அனுமதிக்க கூடாது என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளார் அந்த எம்.எல்.ஏ.

மிஸ்டர் சயீப்.. விருதுகளை பெறுவதை விட தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவதற்கு தானே முன்னுரிமை தரவேண்டும்..?

Dil Chhata HaiHum TumKal Hoo Na HooMain Khiladi Tu AnariOmkaraParamparaParineetaRaceRace 2Saif Ali KhanSalaam Namaste