சீப் பப்ளிசிட்டிக்காக தனக்கு தோன்றிய கருத்தையெல்லாம் டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. குறிப்பாக பிரபல நடிகர்களை கிண்டலடித்து கருத்துக்கூறும் இவர், சமீபத்தில் மம்முட்டி, ரஜினி என சூப்பர்ஸ்டார்களை பற்றி கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இப்போது எந்திரன் படத்தில் ரஜினிக்கு பதிலாக அமிதாப் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனவும், அதேசமயம் அமிதாப் நடித்த டீன்3 படத்தில் அமிதாப்புக்கு பதிலாக ரஜினி நடித்திருந்தால் ரொம்ப சுமாராக இருந்திருக்கும் என டிவிட்டரில் பதிவிட்டு, ரஜினி ரசிகர்களிடம் தொடர்ச்சியாக கண்டனங்களை வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, ராம்கோபால் வர்மாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,”ஷோலே படத்தை உங்களை போன்றவர்கள் எடுத்தால் ரொம்ப கேவலமாகத்தான் இருக்கும். ஆனால் டீன் 3 படத்தில் ரஜினி நடித்தாலும் அந்தப்படம் ஹிட் ஆகியிருக்கும்” என கருத்து தெரிவித்துள்ளார்.