“சௌகார்பேட்டை’ இயக்குனருக்கு பரிசாக கிடைத்த காரும் பரத் படமும்..!


ஆச்சர்யம் தான்.. இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கிய ‘கண்ணியும் காளையும் செம காதல்’ என்கிற படம் இன்னும் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் இந்த சூழலில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடிப்பில் அவர் இயக்கியுள்ள அடுத்த படமான ‘சௌகார் பேட்டை’ அடுத்தவாரம் (நவ-27) ரிலீஸாகும் நிலையில் தயாராகிவிட்டது.

படத்தின் தரம் உயர்வாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதாலும் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர். அத்துடன் தங்களது அடுத்த படமான ‘பொட்டு’வையும் வடிவுடையான் இயக்கத்திலேயே தயாரிக்கிறார்கள்.

பரத் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதமே துவங்குகிறது. ‘சௌகார்பேட்டை’ படத்தை போன்றே இதுவும் திகில் கலந்த பேய் கதையாக உருவாகிறது. மெடிக்கல் காலேஜ் பின்னணியில் பேய்க்கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் வடிவுடையான்.

BarathPrabu SalamonRai LakshmiSrikanthVadivudaiyan