சுந்தர்.சிக்கு குஷ்புவிடம் திட்டு வாங்கிக்கொடுத்த ‘முத்தின கத்திரிக்காய்’ இயக்குனர்..!

நகரம் படத்துக்கு பிறகு நடிப்பே வேண்டாம் என மீண்டும் டைரக்சன் பக்கம் வந்த சுந்தர்.சி தொடர்ந்து ஹிட்டுகளாக கொடுத்து வருகிறார்.. தான் இயக்கிய அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் நடித்தது கூட, இடைவேளைக்குப்பின் வரும் அந்த கேரக்டரில் முக்கிய நடிகர்கள் யாரும் நடிக்க மாட்டார்கள் என்பதால் தான்..

ஆனால் மீண்டும் படம் முழுவதும் வரும் ஹீரோவாக நடிக்கும் ஆசையை அவருக்குள் தூண்டிவிட்ட படம் மலையாளத்தில் வெளியான ‘வெள்ளிமூங்கா’ தான்.. இந்தப்படம் தனக்கு சரியாக செட்டாகும் என உணர்ந்த சுந்தர்.சி தானே இதில் நடித்து, தனது தயாரிப்பிலேயே இந்தப்படத்தை உருவாக்கவும் திட்டமிட்டார்..

ஆனால் டைரக்சன் பொறுப்பு..? தானே நடித்து தானே இயக்குவது சரிவராது என்பதால் தன்னிடம் உதவி இயக்குனராக சுமார் ஆறு வருட காலமாக கூடவே இருந்துவரும் வெங்கட் ராகவனிடம் பொறுப்பை ஒப்படைத்தாரம்.. சுந்தர்.சிக்கு கிட்டத்தட்ட வலதுகரமாக செயல்பட்டு வந்த வெங்கட் ராகவனின் பெயரைத்தான் எதற்கெடுத்தாலும் அவர் அழைப்பாராம்.

இதனால் வீட்டில் கூட அவரது மனைவி குஷ்பு, உங்களுக்கு வெங்கட் ராகவன் தான் ஞாபகத்துள் இருப்பாராக்கும் என திட்டிய நிகழ்வுகள் கூட நடந்தது உண்டு என சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பகிர்ந்துகொண்டார் சுந்தர்.சி.

இந்தப்படத்தில் சுந்தர்.சி ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சதீஷ், விடிவி கணேஷ், வைபவ், சிங்கம்புலி, ரவிமரியா ஆகியோர் நடித்துள்ளனர். விபின் சித்தார்த் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜுன்-17ஆம் தேதியன்று தங்களது அவனி சினிமாஸ் பேனரில் தாங்களே முதன்முறையாக இந்தப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம் சுந்தர்.சி

Muthina KathirikaSingam PuliSundar CVengat Ragavanசதீஷ்சுந்தர்.சிமுத்தின கத்திரிக்கா