‘பிரேமம்’ குழுவினரை பாராட்டிய ஷங்கர்..!


கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ 230 நாட்களை கடந்து சென்னையில் ஓடுகிறது இல்லையா..? அப்படி என்னதான் இருக்கிறது இந்த ‘பிரேமம்’ படத்தில்.. அதையும் பார்த்து விடுவோமே என நேற்று சென்னையில் ‘பிரேமம்’ ஓடும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.. அல்போன்ஸ் புத்ரனின் மேக்கிங் ஸ்டைலும், நிவின்பாலியின் யதார்த்தமான நடிப்பும் அவரை ரொம்பவே கவர்ந்துவிட்டது..

படம் பார்த்துவிட்டு வந்த உடனே தனது பேஸ்புக் பக்கத்தில் “படம் ரியலிஸ்டிக்காக இருக்கிறது. படம் பார்ப்பவர்களை அந்த டீனேஜ் காலகட்டத்திற்கு அப்படியே அழைத்து சென்றுவிடுகிறது.. அல்போன்ஸ் புத்ரனுக்கும் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.. இதற்கு நிவின்பாலி படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

Albonce PuthranNivin PaulyPremamShankar