‘மான் கராத்தே’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்குகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என இரண்டு வெற்றிப்படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களின் இயக்குனரான எஸ்.ஆர்.பிரபாகரன் தான்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள இயக்குனர் பிரபாகரன் படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். எஸ்கேப் நிறுவனத்துக்கும் பிரபாகரனுக்கும் இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Maan KaratePrabakaranஇது கதிர்வேலன் காதல்சுந்தரபாண்டியன்பிரபாகரன்மான் கராத்தேவருத்தப்படாத வாலிபர் சங்கம்