இயக்குனர் ராம.நாராயணன் காலமானார்..!

திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம.நாராயணன் நேற்று இரவு காலமானார். ராம.நாராயணன் என்ற பெயரைக் கேட்டாலே நம் ஞாபகத்துக்கு வருவது விலங்குகளை வைத்து இவர் இயக்கிய படங்கள்தான். யானை, பாம்பு, நாய், மாடு, குரங்கு இவற்றை வைத்து படங்களை எடுத்தவர். தேவர் பிலிம்ஸ்க்கு அடுத்து விலங்குகளை உபயோகித்து அதிக படம் எடுத்தவர் இவர்தான்.

1980ல் தமிழ்சினிமாவில் காலடி எடுத்துவைத்த அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, போஜ்பூரி மற்றும் மலாய் ஆகிய மொழிகளிலும் சேர்த்து இதுவரை 125 படங்களை இயக்கியுள்ளார். தெளிவான திட்டமிடலுடன் 20 அல்லது 25 நாட்களுக்குள் படத்தை இயக்கி முடிப்பது இவரது பாணி. 1985ல் மட்டும் கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கிய மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர்.

ஆனால் இவரது ஆரம்ப காலப் படங்கள் கம்யூனிச சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. அதன்பின் தான் வளர்த்துவிட்ட ஹீரோக்கள் பெரிய ஆளானபின் யாரிடமும் கால்ஷீட்டுக்காக கைகட்டி நிற்காமல் போகப்போக கமர்ஷியல் ரூட்டுக்கு மாறி, மிருகங்களை மைய கதாபாத்திரங்களாக வைத்து படங்களை இயக்கினார். அதற்கடுத்து பாளையத்து அம்மன், ராஜகாளி அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற சாமி படங்களை எடுத்தவர்.

கேப்டன் விஜயகாந்த்தை வைத்து பத்து படங்களை இயக்கியுள்ள ராம.நாராயணன் விஜயகாந்த்தின் ஆரம்பகால வளர்ச்சியில் அவருக்கு துணை நின்றவர். அதுமட்டுமல்ல ஆக்‌ஷன் கிங் அர்ஜூனை தமிழ்சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் இரண்டுமுறை பதவி வகித்துள்ளார் ராம.நாராயணன்.  எப்போதும் சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்துவந்த இவர் 1989 தேர்தலில் திமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்புதான். அன்னாரின் மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது behind frames சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

DurgaKanna Laddu Thinna AasaiyaPaalayathu AmmanRaaja Kaali AmmanRama Narayananஇயக்குனர் ராம.நாராயணன் காலமானார்..!கோட்டை மாரியம்மன்பாளையத்து அம்மன்ராஜகாளி அம்மன்