கடந்த 2014ல் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ஐஸ்க்ரீம்’ என்கிற படத்தை பற்றி தெரியும் தானே.. கோடிகளில் தான் படம் இயக்கமுடியுமா..? ஏன் லட்சங்களில் படம் இயக்க முடியாதா என சவால் விட்டு வெறும் இரண்டரை லட்சத்தில் இந்தப்படத்தை இயக்கி வெளியிட்டதோடு கோடிகளில் வசூலை அள்ளினார்..
நவ்தீப், தேஜஸ்வினி நடித்த இந்தப்படத்தை தமிழில் வெளியிட முயற்சி செய்த மதுராஜ் என்பவர் இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் ரைட்ஸை வாங்கி படத்திற்கு ‘சாக்கோ பார்’ என பெயர் வைத்து ரிலீசுக்கு ஏற்றவிதமாக மாற்றிவிட்டார். இதையறிந்த ஹக்ஸ் ஸ்டுடியோ என்கிற நிறுவனம் இந்தப்படத்தை இன்னும் கூடுதல் விலைகொடுத்து வாங்கி வெளியிடுகிறதாம்.