“கருத்து சுதந்திரத்தின் எல்லையை அதிகப்படுத்தும் ‘ஜோக்கர்’ ; ராஜூ முருகன் பெருமிதம்..!


தான் இயக்கிய முதல் படமான ‘குக்கூ’விலேயே தான் வழக்கமான ஒரு கமர்ஷியல் இயக்குனர் அல்ல என்பதை அழுத்தமாக பதியவைத்தவர் இயக்குனர் ராஜூ முருகன். தற்போது அவரது அடுத்த படைப்பாக ‘ஜோக்கர்’ உருவாகியுள்ளது.. மிகப்பெரிய நட்சத்திர கும்பல் எதுவும் துணைக்கு இல்லாமல் சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இதில் இயக்குனர் பாலா, வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் ராஜூ முருகன், ”இந்த நாட்டோட 90 சதவீத மக்களை ஒண்ணுமே தெரிஞ்சுக்க விடாம ஒரு சக்தி அடக்கி ஆளுது.. அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.. படம் ஓடும்.. ஓடாது என்கிற கவலையெல்லாம் இல்லாமல் கருத்து சுதந்திரத்தின் எல்லையை கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கிறேன்.. அவ்வளவுதான்” என பேசினார்.

Director Raju MuruganJokerஜோக்கர்ராஜூ முருகன்