ஓல்டு ஸ்டைலில் பாட்டு வைக்கிறாரா இயக்குனர் ராஜேஷ்..?

அவர் பாட்டுக்கு தனது டிவிட்டரில் ஒரு போட்டோவை அப்லோட் பண்ணிவிட்டு ஹாயாக பிளைட் ஏறிவிட்டார் தமன்னா.. இங்கே போட்டோ பற்றிய யூகங்கள் தான் றெக்கை கட்டி பறக்கின்றன. அப்படி என்ன போட்டோ அது..? வேறொன்றுமில்லை. ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படப்பிடிப்பில் தமன்னா, ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பிளாக் & ஒயிட்டில் ஒரு பாடலுக்கு மூவ்மென்ட் கொடுப்பது போன்ற ஸ்டில் தான் அது.

பழைய பாடல் டைப்பில் ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்கள் என்கிற கோணத்தில் யூகங்கள் விரிந்துள்ளன. ராஜேஷ் என்ன சொல்கிறார் அந்த போட்டாவை பற்றி..? “அது ஒரு பாடல்காட்சி தான்.. பழைய பாணி பாடல் இல்லை என்றும் சொல்லமாட்டேன்.. ஆனால் அதுவே முழுப்பாடல் அல்ல.. சில நிமிடங்கள் மட்டும் தான் இடம்பெறுகிறது” என்கிறார் ராஜேஷ்.

AryaM RajeshTamannaஆர்யாஇயக்குனர் ராஜேஷ்தமன்னாவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க