“எம்.எல்.ஏ ஆகவேண்டும்” ; விருது விழாவில் விருப்பத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பேரரசு..!

பொதுமேடைகளில் பரபரப்பாக பேசுவதில் வல்லவர் இயக்குனர் பேரரசு. அப்படித்தான் சமீபத்தில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய அவர் எம்.எல்.ஏ ஆகவேண்டும்”என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விழாவில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகளை இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு, “2௦17ஆம் வருடத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியான படங்கள் பெரிய வெற்றிகளை குவித்துள்ளன. டைரக்சனை விட நடிப்புதான் பாதுகாப்பாக தோன்றுகிறது.. காரணம் கஷ்டப்பட்டு டைரக்சன் பண்ணினாலும் மதிப்பு கிடைப்பதில்லை, இனி வரும் நாட்களில் நடிப்பில் கவனம் செலுத்தப்போகிறேன். அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏவாக ஆகிவிடவேண்டும்” என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியபோது, “அடுத்ததாக படங்களை இயக்கவுள்ளேன். எனக்கு டைட்டில் பிரச்சனை எல்லாம் இருக்காது. எஜமான்-2, சிங்காரவேலன்-2 என டைட்டில்களை வைத்து படம் எடுத்துவிடுவேன்” என கூறினார்

Perarasuஆர்.வி உதயகுமார்எஜமான்-2சிங்காரவேலன்-2பேரரசு