ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கௌதம் கார்த்திக்..!

ஆச்சர்யம் தான்.. ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துக்குப்பிறகு விஷ்ணுவை வைத்து ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ என்கிற படத்தை ஆர்.கண்ணன் இயக்க இருப்பதாக கடந்த வருடம் முழுவதும் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தனது புதிய படத்தில் கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்கவுள்ளார் என்கிற செய்தி நேற்று அதிகாரப்பூர்வாக வெளியாகியுள்ளது.

இது கண்ணன் இயக்கும் ஆறாவது படம் ஆகும். வரும் செப்-12ஆம் தேதி தொடங்கவிருக்கும் இதன் படப்பிடிப்பு 30 நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் முடிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பி.சி.ஸ்ரீராமின் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மோகன் என்பவர் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

Director KannanGowtham Karthickஆர் கண்ணன்கௌதம் கார்த்திக்