மலையாள இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் லால்ஜோஷ்.. இவரை ‘கேரளத்து விக்ரமன்’ என்றுகூட சொல்ல்லாம். அந்த அளவுக்கு நெஞ்சை நெகிழவைக்கும் படங்களுக்கு சொந்தக்காரர். இவர் தற்போது துல்கர் சல்மானை வைத்து ‘விக்ரமாதித்யன்’ படத்தை தற்போது இயக்கி முடித்துவிட்டார்.
அடுத்து என்ன? ரெஸ்ட் தான்.. கொஞ்ச நாளைக்கு டைரக்ஷனுக்கு லீவு விட்டுவிட்டு நேற்று ஐரோப்பா டூர் கிளம்பிவிட்டார் லால் ஜோஸ். கூடவே அவரது நண்பர்களான ஆட்டோமொபைல் ஜர்னலிஸ்ட்டான பைஜு நாயரும், இதுபோல அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவரும் எழுத்தாளருமான சுரேஷ் ஜோசப்பும் சேர்ந்து கிளம்பிவிட்டார்கள்.
75 நாட்கள், 27 நாடுகள், கிட்டத்தட்ட 24000 கிமீ தூரம் இவர்கள் பயணப்பட இருக்கிறார்கள். திடீரென இப்படி பயணம் கிளம்பிவிட்டீர்களே என கேட்டால் இது எங்களது சாகசப்பயணம்.. ஊர்சுற்றுதை தவிர பிரத்யேக காரணங்கள் எதுவுமில்லை” என்கிறார் லால்ஜோஸ்.