இயக்குனராக மாறினார் சி.வி.குமார்..!

கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பளித்து படங்களை தயாரிப்பவர் என்கிற அடையாளத்துடன் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர் திருக்குமரன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சி.வி.குமார்.. இப்போது இவருக்குள் இருந்த படைப்பாளி விழித்துக்கொண்டுவிட இவரும் இயக்குனராக களத்தில் குதித்துவிட்டார்.

இவர் இயக்கம் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தை சி.வி.குமாருடன் இணைந்து தயாரிக்கிறது ஸ்டுடியோகிரீன் நிருவனம். சி.வி.குமார் படங்களின் ஆஸ்தான எடிட்டரான லியோ ஜான்பால் தான் இந்தப்படத்திற்கும் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர்-5ஆம் தேதி தொடங்குகிறது.

சி வி குமார்சுந்திப் கிஷன்ஜிப்ரான்லியோ ஜான்பால்ஸ்டுடியோகிரீன் நிருவனம்