இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உடன் கைகோர்க்கும் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார்

‘சிங்கம் 2’, ‘தேவ்’, ‘சர்தார்’, ‘காரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் குமார், ’கொலைகாரன்’ மற்றும் சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற இணைய தொடரான ‘வதந்தி’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுடன் கைகோர்த்துள்ளார்.

அழுத்தமான திரைப்படங்களை தயாரித்து வரும் லக்‌ஷ்மண் குமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர்.

andru luisdirector Andre Luis join producer lakshman kumarKollywood NewsLakshman Kumarprince picutres