ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதை ஏற்காத இயக்குனர் சசி..!


பாசஞ்சர் ரூட்டிலிருந்து, தடாரென எக்ஸ்பிரஸ் ட்ராக்கிற்கு தடம் மாறியுள்ளார் இயக்குனர் சசி.. ஆம், அவரது டைரக்சனில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்தபோது அப்படித்தான் தெரிகிறது.. ‘பூ’ சசிக்குள் இப்படி ஒரு ‘புயல்’ ஆக்சனா என்கிற பிரமிப்பு ஏற்படுவது உண்மை..

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கூறினார். அதாவது சசி ஒரு படம் இயக்குகிறார் என தனது நண்பர்கள் வட்டாரம் மூலம் தகவல் தெரியவந்தபோது, அதற்கு ‘பிச்சைக்காரன்’ என டைட்டில் வைத்திருப்பதாக அறிந்தபோது இந்த டைட்டில் வேண்டாம் என சசியிடம் சொன்னாராம்.. அப்போதைக்கு சசியும் சரியென்று சொல்லிவிட்டாராம். ஆனால் திடீரென போஸ்டரை பார்த்தால் ‘பிச்சைக்காரன்’ என்றே பெயரை மாற்றாமல் இருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டு விட்டாராம் முருகதாஸ்.

A R murugadossDirector SasiPichaikkaran Audio LaunchPooPoo SasiVijay Antony