மிஸ் இந்தியா யு.ஏ.இ-2௦15 போட்டியில் டைட்டில் வின்னரான நிவேதா பெதுராஜ் என்பவரை ‘ஒருநாள் கூத்து’க்காக தமிழ்சினிமாவிற்கு அழைத்து வந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.. ‘ஒரு நாள் கூத்து’ என்றதும் ஐட்டம் பாடலுக்காக என நினைத்துவிட வேண்டாம்..
ஒருநாள் கூத்து என்கிற படத்தின் ஹீரோ அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடிக்கத்தான் இவர் தமிழுக்கு வந்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன் தான் துபாயில் செட்டில் ஆகிவிட்ட தமிழ் குடும்பம் என்பதால் இவருக்கும் தமிழ் சரளமாக பேச வருகிறது. நடிப்பு, தமிழ்ப்பேச்சு இரண்டும் ஒன்றாக அமைந்ததால் நெல்சனுக்கு ரொம்பவே திருப்தி.
இந்தப்படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.. ‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் கருணாகரன், பாலசரவணன், முண்டாசுப்பட்டி ராமதாஸ் என மூன்று காமெடி நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.