மலையாள நடிகர் திலீப்பிற்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு..!

நடிகை பாவனா கடத்தப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கேரள போலீசால் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு வார காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.. முன்னதாக, கேரளாவின் அங்கமாலி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திலீப்பிற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றும், பல்சர் சுனில் என்பவனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு திலீப் மேல் தொடுக்கப்பட்டுள்ளது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டு, அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது.. ஆனால் அது அங்கமாலி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்திலும் திலீப் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு செய்யப்பட்டு இருந்தது.. இந்த வழக்கை பரிசீலித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் திலீப் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் தற்போது சிறையிலிருக்கும் நிலையே தொடர வேண்டும் என கூறி ஜாமீன் தர மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கு விபரங்களை ஆராய்ந்த நீதிபதி, நடந்த சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BhavanaDileepMalayalamதிலீப்பாவனாமலையாளம்