ஆயிரத்தில் ஒருத்தனுக்கும் கூட்டத்தில் ஒருத்தனுக்கும் என்ன வித்தியாசம்..?

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இந்தப்படத்தின் கதாநாயகனாக அசோக் செல்வன் மற்றும் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ஆயிரத்தில் ஒருத்தனுக்கும் கூட்டத்தில் ஒருத்தனுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கினார்..

“சூப்பராக படிக்காத, அதேசமயம் மோசமாகவும் இல்லாத மிடில் பெஞ்ச் மாணவர்களின் வாழ்க்கை தான் இந்த கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் கரு. முன்பு வானொலியில் பணிபுரிந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கிற பேச்சாளரை சந்தித்தபோது அவர், நான் ஒரு மிடில் பெஞ்ச் மாணவன் என்று தன்னை சொல்லிக்கொண்டார்..

அப்படிப்பட்டவர் தனக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து ஒரு பேச்சாளராக மாறி, தினந்தோறும் அதிகாலையில் எழுந்ததுமே அவரது குரலை மக்கள் கேட்கும் அளவுக்கு மாறினார். அப்படி தனக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டரிபவன் ஆயிரத்தில் ஒருத்தனாக மாறுகிறான்.. அப்படி கண்டுபிடிக்க இயலாதவன் கோட்டத்தில் ஒருத்தனாகவே இருந்து விடுகிறான்.. இது இந்தப்படத்தின் நாயகனின் கதை’ என கூறினார் இயக்குனர் ஞானவேல்.

அசோக் செல்வன்கூட்டத்தில் ஒருவன்ஞானவேல்ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்நிவாஸ் கே.பிரசன்னாப்ரியா ஆனந்த்