திருநங்கையை குடும்பத்துடன் இணைத்து வைத்த சீனுராமசாமி..!

சினிமா சில நேரங்களில் நல்ல விஷயங்களையும் செய்கிறது.. அதிலும் சீனு ராமசாமி போன்ற இயக்குனர்கள் உருவாக்கும் படங்கள் தவறான பாடம் எதையும் மக்களுக்கு சொல்லிக்கொடுக்காது. அதேசமயம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்.. அதன் ஒரு வெளிப்பாடுதான் அந்தப்படத்தில் நடித்த திருநங்கையான ஜீவா என்கிற சினேகா பல வருடங்களாக பிரிந்த்ருந்த தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தது.

தர்மதுரை திரைப்படம் பார்த்த அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் அந்தப்படத்தில் நடித்திருந்த திருநங்கை ஒருவரை மிக கண்ணியமான வாட்ச்வுமன் கதாபாத்திரமாக சித்தரித்திருந்ததும், கதாநாயகன் விஜய்சேதுபதி அவரது வாழ்க்கை பாதையை சீரமைத்து தருவதும் தான்

இவரது சொந்த ஊர் சிவகாசி, இவருக்கு தான் திருநங்கை என்று தெரிந்ததும் 13 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துவிட்டார். ஆப்டி இப்படி பத்து வருடங்கள் ஓடிவிட, சமீபத்தில் வெளியான தர்மதுரை படத்தில் நடித்த விசாலினி அவர்களுக்கு ஒப்பனைகலைஞராக பணியாற்ற சென்றிருந்தபோது. இயக்குனர் திரு.சீனுராமசாமி அவரை அழைத்து நடிக்க வைத்தார்.

ஊரில் படம் பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை அழைத்து பேசினர்.. இந்த படத்தில் நடித்ததின் மூலம் பிரிந்து இருந்த என் குடும்பத்தினருடன் நான் சேர்ந்துவிட்டேன். என்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படியொரு கௌரவமான பாத்திரத்தில் நடிக்க வைத்த அண்ணன் இயக்குனர் திரு.சீனுராமசாமி அவர்களுக்கு நன்றி” என்கிறார் நெகிழ்ச்சியாக.

DharmaduraiSeenu RamasamyVijay Sethupathiசீனு ராமசாமிதர்மதுரைவிஜய் சேதுபதி