தனுஷ் படத்தில் நடிக்க விஜய்யின் தந்தை மறுத்தது ஏன்..?

தனுஷ், முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், முதன்முதலாக முழு நீள அரசியல் கதையில் நடித்துள்ள படம், இத்தனை வருடங்களில் த்ரிஷாவுடன் முதன்முதலாக இணைந்து நடித்துள்ள படம் என பல ‘முதன்முதல்’களை உள்ளடக்கி உருவாகியுள்ள படம் தான் ‘கொடி’.. தனுஷின் தயாரிப்பில் இரண்டு ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

த்ரிஷாவுடன் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவரும் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.. தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.. இந்த நிகழ்வில் இயக்குனர் துரை செந்தில்குமார் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

“பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் நான் முதலில் கதை சொல்ல செல்லும்போது கதையை கேட்டவர் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ஆனால் வீட்டிற்கு சென்று இப்படத்தை பற்றி கூறியதும் ஷோபா மேடம் அவரிடம் தனுஷ் படத்தில் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம் நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக ‘கொடி’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்களாம்.. முதலில் என்னுடைய இயக்கத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியவர். வீட்டிற்கு சென்ற சிறிது நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டு நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அவர் நடித்திருப்பது இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.” என கூறினார் துரை செந்தில்குமார்.

AnupamaDhanushDurai Senthil KumarKodiS A Chandrasekarகொடிதனுஷ்