கடந்த சில நாட்களாகவே பாடகி சுசித்ரா தனது டிவிட்டரில் பதிவிட்ட சில புகைப்படங்கள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. குறிப்பாக அதில் ஒருவராக தனுஷ் மீதும் இந்த சர்ச்சை திரும்பியிருக்கிறது.. ஏற்கனவே மதுரை நீதிமன்றம் வரை சென்று தனது வாரிசுரிமை பற்றி நிரூபிக்க வேண்டிய இக்கட்டில் அலைந்துகொண்டு இருக்கும் தனுஷுக்கு இது மிகப்பெரிய சங்கடத்தை கொடுத்துள்ளது..
இதுகுறித்து தனுஷ் இன்னும் விளக்கம் எதுவும் அளிக்காத நிலையில், அவரது சகோதரியும் டாக்டருமான விமலகீதா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் விரிவான, அதேசமயம் மன சஞ்சலத்துடன் கூடிய பதிவை இட்டுள்ளார்.
அதில், “நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இங்கே வந்து எங்கள் தந்தையின் முயற்சியால், தியாகத்தால் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.. தனுஷ் இன்றைக்கு மிகப்பெரிய நடிகர்.. உழைப்பால் மட்டுமே அவர் இந்தநிலையை அடைந்திருக்கிறார்.. அதனால் அவர் அந்த இடத்திற்கு தகுதியானவர் தான்.. ஆனால் தேவையில்லாமல் அவரை குறிவைத்து தாக்குவது ஏன்..? சோஷியல் மீடியா என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாமா, அதற்கென வரைமுறை இல்லையா..? பிரச்சனை செய்ய நினைப்பவர்களே.. தயவுசெய்து நீங்களும் வாழுங்கள்.. எங்களையும் வாழ விடுங்கள்” என கூறியுள்ளார் விமலகீதா..
மேலும் கொஞ்ச நாட்களுக்கு ட்விட்டர், பேஸ்புக் இவற்றிலிருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.