விஜய் யேசுதாசுக்கு தனுஷ் கொடுத்த(து) லோக்கல் சரக்கா.. பாரின் சரக்கா..?

மணிரத்தினத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா என்பவர் ‘படைவீரன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. நாயகியாக அம்ரிதா ஐயர் மற்றும் முக்கிய வேடத்தில் கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் ‘படைவீரன்’ படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதன்பின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனிற்கு பாடலாசிரியர் பிரியனின் வரிகளில் “லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்கிற படு துள்ளலான பாடலை பாடியும் கொடுத்துள்ளார் தனுஷ்.

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. மேலும் ‘மாரி’ படத்தில் தனுஷிற்கு வில்லனாக விஜய் யேசுதாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.

Dhanushpadaiveeranஅம்ரிதா ஐயர்கார்த்திக்ராஜாபடைவீரன்விஜய் யேசுதாஸ்