ஒரே நாளில் தனுஷ்-சிம்பு படங்கள் இணைந்து வெளியாகும் அதிசயம்..!

கடந்த வருடம் லிட்டில் சூப்பர்ஸ்டாருக்கு படம் ரிலீஸாகவில்லையே தவிர ஒருபக்கம் பாண்டிராஜின் படம், இன்னொரு பக்கம் கௌதம் மேனனின் படம் என மாறி மாறி பிஸியாகத்தான் இருக்கிறார் சிம்பு. சரி.. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு சிம்பு நடித்துக்கொண்டிருந்த ‘வாலு’,  என்னாச்சு என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு முன்…

இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டது 2012ஆம் வருடத்தில்.  எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவனின் கதை தான் ‘வாலு’. புதுமுகம் விஜய் சந்தர் இயக்கும் இந்தப்படத்திலும் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தானம்.

இப்போது வாலு படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதை ரிலீஸ் செய்யும் வேலைகளை தூசு தட்டியுள்ளார் சிம்பு. அதன் ஒரு முயற்சியாக ‘வாலு’ படத்தின் ட்ரெய்லரை வரும் வெள்ளியன்று(ஜூலை- 18) தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்.

அதாவது தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகும் அதே நாளில் அந்தப்படம் ஓடும் அதே தியேட்டர்களில் சிம்புவின் ‘வாலு’ ட்ரெய்லரையும் நீங்கள் பார்க்கலாம். ஒரே நாளில் தனுஷ்-சிம்பு படங்களை ஒரே தியேட்டரில் இணைந்து பார்க்கும் அபூர்வ வாய்ப்பை நீங்களும் பெற்று பாக்கியசாலியாக மாறுங்கள்..

Amala PaulDhanushSimbuVaaluVellailla Pattadhari