சினிமாவில் இரண்டு விஷயங்கள் நடக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று கௌதம் மேனன் படத்தில் தனுஷ் நடிப்பது.. இன்னொன்று செல்வராகவன் படத்தில் சிம்பு நடிப்பது.. இதோ இப்போது இரண்டு விஷயங்களுமே நடக்கப்போகிறது.
எதற்கு இவ்வளவு பில்ட் அப் என்றால் தற்போது நடந்திருக்கும் நிகழ்வு அவ்வளவு ஆச்சர்யமானது. சூரியன் மேற்கே உதிப்பதற்கு சமமானது. ஆம் செல்வராகவன் டைரக்ஷனில் புதிய படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது.. உண்மையிலேயே மிக ஆச்சர்யமான கூட்டணி இது.
காரணம் சினிமாவைப் பொறுத்தவரை தனுஷும் சிம்புவும் எதிர் எதிர் துருவங்கள்.. கடுமையான சக போட்டியாளர்கள். இந்த சூழ்நிலையில் தனுஷின் அண்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உண்மையிலேயே ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன..?
அதற்கேற்ற மாதிரி தனுஷும் அண்ணன் செல்வராகவனுக்கும் தம்பி சிம்புவுக்கும் ‘ஆல் தி பெஸ்ட்’ என வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அத்துடன் “சிம்பு நிறைய சிறந்த விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராகு” என்று அண்ணன் டைரக்சனில் சிம்பு நடிக்கும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அதிசயங்கள் எப்போது நடக்குமென்று சொல்ல முடியாது. அதேபோல சில விஷயங்கள் முன்கூட்டியே நடக்காததற்கு காரணங்களை சொல்லவும் முடியாது. அதுமாதிரித்தான் தற்போது உருவாகியுள்ள கூட்டணியும் என்கிறார்கள் திரையுலகத்தினர்..