தனுஷ் போடும் ‘அம்மா கணக்கு’ம் ‘அப்பா’ கணக்கும்..!


விசாரணை படத்துக்கு தேசியவிருதுகள் கிடைத்து ஒரு தயாரிப்பாளராக தனுஷுக்கு பெருமை சூட்டியது… நடிகராக சமுத்திரக்கனிக்கு பெருமை சேர்த்தது. இந்த பெருமிகளுக்கு சொந்தக்காரர்களான இருவரும் அடுத்ததாக வியாபார கூட்டணி அமைக்க இருக்கின்றனர்.. ஆம்.. தற்போது சமுத்திரக்கனி கதைநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘அப்பா’.. இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த தனுஷை, படம் ரொம்பவே கவர்ந்துவிட்டதாம்.

அதனால் இந்தப்படத்தை தானே வெளியிட முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரலாம் என தெரிகிறது.. இன்னொரு பக்கம் தனுஷ் ‘அம்மா கணக்கு’ என்கிற படத்தையும் தயாரித்து ரிலீசுக்கு தயாராக்கி கொண்டிருக்கிறார். ஆக அம்மா கணக்கும், அப்பா கணக்கும் தனுஷிற்கு வசூல் ரீதியாகவும் கைகொடுக்கும் என நம்பலாம்.

Amma KanakkuAppaDhanushRevathySamuthirakani