மம்முட்டி, திலீப் நடித்து கடந்த 2௦12ஆம் வருடம் வெளியான ‘கம்மத் & கம்மத்’ என்ற மலையாளப்படத்தில் தனுஷ், சிறப்பு
தோற்றத்தில் நடிகர் தனுஷாகவே நடித்திருந்தார். இரண்டு நிமிட காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் அது தனுஷுக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
தனுஷின் படங்களுக்கு மலையாளத்திலும் நல்ல மார்க்கெட் உண்டு.. அந்த வகையில் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமிரா, கார்த்திக் நடித்துள்ள ‘அனேகன்’ படத்தின் கேரளா வினியோக உரிமையை ஈ-4 என்டெர்டெயிண்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏ.ஜி.எஸ் சினிமா தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.