9 வயது சிறுமி கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேட்கும்போதே நெஞ்சம் பதைக்கிறது.. ஆனாலும் விதியுடன் எதிர்த்து போராட வலுவிலாத கோடீஸ்வரி என்கிற அந்த சிறுமி கேன்சரின் கடைசி கட்டத்தில் இருக்கிறாள்.. ராமச்சந்திரா மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
இந்தநிலையில் தான் அவளுடைய கடைசி ஆசை ஏதாவது இருந்தால் நிறைவேற்றி வைக்கலாமே என அவளிடம் கேட்டபோது, தனுஷின் ரசிகையான அவள் தனுஷை பார்க்கவேண்டும் என்று சொன்னாள்.. இந்த விஷயம் தனுஷுக்கு தெரிவிக்கப்பட்டதும், உடனே ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்து அந்த சிறுமியை சந்தித்தார்..
சிறுமியின் நிலை அறிந்து கனத்த மனதுடன் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த சிறுமியுடன் சிறிது நேரம் செலவிட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தினார் sதனுஷ்.