இத்தனைக்கும் தனுஷ் எந்த தவறும் செய்யவில்லை.. ஆனால் காலம் அவர் மீது ஒரு வழக்கை பதியவைத்து, அவரை நீதிமன்றத்துக்கு, அதுவும் சென்னையிலிருந்து மதுரைக்கு வரவழைத்துள்ளது தான் விநோதம்.. ஆம்.. மதுரையை அடுத்துள்ள மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் தனுஷ் தங்களது மகன் என்றும் சிறுவயதில் பிரிந்துபோன அவரைத்தான் கஸ்தூரி ராஜா தனது மகன் என வளர்த்து வருகிறார் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்கள்.
மேலும் தனுஷிடம் இருந்து தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.. தனுஷ் தரப்பில் இருந்து, தான் அவர்களது மகன் இல்லை என்பதை பலமுறை கோர்ட்டில் தனது வக்கீல்கள் மூலமாக பதிவு செய்து வருகிறார்.
இருப்பினும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் ஆஜராகியே தீரவேண்டும் என்றும் அவரது அங்க அடையாளங்களை நீதிமன்றத்தில் சரி பார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை மீர விரும்பாத தனுஷ் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜரானார். தனுஷுடன் அவரது தந்தை கஸ்தூரிராஜா, அம்மா விஜயலட்சுமி மற்றும் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
மருத்துவர்கள் முன்பாக அங்க அடையாள சோதனைகள் நடைபெற்றபின் இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை மார்ச்-2ல் நடைபெறுவதாக நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.