மேலே சொன்னதை அப்படியே ராவாக படித்தால் குழப்பமோ அல்லது ஆச்சர்யமோ தான் மிஞ்சும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு லிங்க் இருக்கிறது இல்லையா..? தனுஷ் நடித்த முதல் இந்திப்படமான ‘ராஞ்சனா’வை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தற்போது மாதவனை வைத்து, தான் ஏற்கனவே இயக்கிய ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார்.
சமீபத்தில் கோவா சென்றிருந்த தனுஷ், ஆனந்த் எல்.ராய்க்கு கூட முன்கூட்டியே சொல்லாமல் சஸ்பென்சாக அவரை சந்திக்க டெல்லி சென்றிருக்கிறார். அதன்பின் மறுநாள் முழுவதும் ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் தான் இருந்திருக்கிறார் தனுஷ்.
தனக்கு இந்தியில் ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தவர் என்கிற மரியாதை நிமித்தமாகவே தானாக தேடிச்சென்று ஆனந்த் எல்.ராயை சந்தித்திருக்கிறார் தனுஷ். யார் கண்டது..? ஒருவேளை இந்தப்படத்தில் ஏதாவது கெஸ்ட் ரோலில் தனுஷ் நடிப்பதாக பின்னாளில் அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.