துப்பாக்கி சூட்டில் ரசிகர் மரணம் ; தனுஷ் வேதனை

கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் அராஜகமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் 13 பேர் மரணமடைந்துள்ளனர்.. இதில் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகியான ரகு என்கிற காளியப்பனும் ஒருவர். தனது ரசிகரின் மரணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்..

“துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார் தனுஷ்..

DhanushSterliteதனுஷ்ஸ்டெர்லைட்ஸ்டெர்லைட் ஆலை