த்ரில்லர், ஆக்சன், காமெடி என எல்லா ஏரியாவிலும் பயணித்துவிட்ட அருள்நிதி ‘டிமாண்டி காலனி’ படம் மூலம் ஹாரர் ஏரியாவிலும் உள்ளே நுழைந்துவிட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமாண்டி காலனியில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள கேபா ஜெரமியாவும் அறிமுக இசையமைப்பாளர் தான். ஆனால் இசையமைப்பாளர்களான டி.இமானையும், அனிருத்தையும் தனது படத்தில் பாடவைத்திருப்பதன் மூலம் தன்மீது கவனத்தை திருப்பியுள்ளார்.
இதில் சிறப்பு என்னவென்றால் படத்தின் ஹீரோயின் யார் என்பதை இப்போதுவரை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள்.. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்தப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வரும் மே-22ல் ரிலீஸ் செய்கிறது.