இந்தப்படத்தில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு இருவேறு பிரிவினருக்குள் தேவையில்லாமால் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருப்பதாகவும், அதனால் இந்தப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்றும் பவன்சர்மா என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனையடுத்து படத்தின் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி, ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர்மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப்படம் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது இன்னும் ஐம்பது நாட்கள் கழித்து தான் ரிலீஸாக இருக்கிறது. இதுவே நம்ம ஊராக இருந்தால் முதலில் கமுக்கமாக இருந்துவிட்டு படம் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்கள் முன்னாடி வழக்கு தொடர்ந்து மிகப்பெரிய டார்ச்சரை கொடுத்திருப்பார்கள். அந்தவகையில், நல்லவேளை இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.