அக்-21ல் ‘டார்லிங்-2’ ரிலீஸ்..!

இப்போதெல்லாம் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அதன் தொடர்ச்சியான கதையாகவோ, அதே நடிகர்கள் தான் நடிக்கவேண்டும் என்கிற கட்டாயமோ இல்லை.. முந்தைய பாகத்தின் கதைக்கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம் என்கிறார் ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா..

அந்த வகையில் டார்லிங் படம் வெற்றி பெற்றதால், ஏற்கனவே ‘ஜின்’ என்கிற பெயரில் தயாரான படத்திற்கு, அதை பார்த்த அடுத்த கணமே, டார்லிங்-2 என்கிற டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என தோன்றியதால் தற்போது பெயரை மாற்றிவைத்துள்ளார் ஞானவேல்ராஜா..

ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படத்தும் குழப்பத்தை, நகைச்சுவையுடன்,காதலும் கலந்து கொடுத்து இருக்கிறார் புதிய இயக்குனர் சதீஷ் சந்திர சேகர். ‘மெட்ராஸ்’ கலையரசன், ரமீஸ்ராஜா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் வரும் அக்-21ல் ரிலீஸாக இருக்கிறது.

டார்லிங்-2