டார்லிங்-2 ரிலீஸ் தள்ளிப்போக உண்மையான காரணம் ; ஸ்டுடியோகிரீன் விளக்கம்..!

ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக டார்லிங்-2’ படம் ஏப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கலையரசன், ரமீஸ் ராஜா, மாயா, காளி வெங்கட், முனீஸ்காந்த், மெட்ராஸ் ஜானி நடித்துள்ள இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். ரதன் என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய ஸ்டுடியோகிரீன் நிர்வாக அதிகாரி சக்திவேலன் ‘டார்லிங்-2’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது தொடர்பாக சமீப நாட்களாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உண்மையை விளக்கினார். கடந்த மார்ச்-18ல் இந்தப்படத்தை வெளியிட முதலில் தேதி குறிக்கப்பட, அந்த சமயத்ததில் தியேட்டர்களும் கைவசம் நிறைய இருந்ததாம்.

ஆனால் அதே நேரத்தில் சூர்யாவை வைத்து தயாரித்துவரும் ‘சிங்கம்-3’ படப்பிடிப்பு தொடர்பாக ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் இருந்ததால், தான் திரும்பி வந்தபிறகு தனது மேற்பார்வையிலேயே இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய விரும்பினாராம்.

குறிப்பாக தாங்கள் தயாரித்து வெளியிடும் படங்களை காட்டிலும், தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்படும் படங்களில் ஞானவேல்ராஜா மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்துவதால் தான் தனது மேற்பார்வையில் ஏப்-1 என்கிற அருமையான் ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணினார்களாம்.

Darling 2Darling 2 Movie Press Meet NewsK E Gnanavel RajaKaaliKALAIYARASANSingam 3Studio Green