ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறது ‘டார்லிங்-2’. புதுமுகம் ரமீஸ்ராஜா ஹீரோவாக நடிக்க வில்லனாக நடிக்கிறார் மெட்ராஸ் கலையரசன்.. பல குறும்படங்களை இயக்கிய சதீஷ் சந்திரசேகர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘ஜின்’ என பெயரிடப்பட்ட இந்தப்படம் தான் டார்லிங் பட வெற்றி காரணமாக சென்டிமென்ட்டாக ‘டார்லிங்-2’வாக மாறியுள்ளது.
ஐந்து இளைஞர்கள் காட்டுக்குள் இருக்கும் ரிசார்ட் ஒன்றிற்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவர் தான் பேய்.. ஆனால் யார் பேய் என சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாது.. இதை வைத்து த்ரில்லிங்காக கதை பண்ணியிருக்கிரார்கலாம். கேட்கவே புதுசா இருக்குதே..