“உனக்கென்ன வேணும் சொல்லு..? – பெயர் மாறிய ‘டெய்சி’..!

இன்றைய தேதியில் பேய்ப்படங்களாக இருந்தாலும் அதிலும் வித்தியாசம் காட்ட முயற்சித்தால் தான் ரசிகர்களை கவனம் ஈர்க்க முடியும், வெற்றி பெறமுடியும் என்கிற நிலை. வில்லனை பழிவாங்கும் பேயை காட்டியவர்கள், அடுத்து ஹீரோவுக்கு உதவும் பேயையும் காட்டினார்கள்.

சமீபத்தில் கூட ‘பேபி’ என்கிற படத்தில் ஒரு பேய் தன் குழந்தையை வளர்க்கும் வீட்டில் இருந்துகொண்டு, அந்தக்குழந்தையின் சந்தோஷத்தை பங்குபோட வரும் மற்றொரு குழந்தையை பயமுறுத்துவதாக கூட கதையில் வித்தியாசம் காட்ட முயற்சித்தார்கள்.

இப்போது தயாராகியுள்ள ‘டெய்சி’ படம் கூட பேய்களிலே இன்னொரு புதுரகம் தான். கருவில் இருக்கும் குழந்தைக்கு தந்தை ஒரு வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் அதை நிறைவேற்ற முடியாமல் போகிறது. கருவிலேயே இறந்த குழந்தை பேயாக மாறி, தனது இறப்புக்கு காரணமாக இருந்தவர்களை பழிவாங்குகிறது என புதிய வடிவத்தில் பேய்க்கான காரணத்தை சொல்லியிருக்கிறார்கள்.

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ பட ஹிட் பாடலான ‘உனக்கென்ன வேணும் சொல்லு? பாடலின் முதல்வரியை எடுத்து இந்தப்படத்தின் டைட்டிலாக தற்போது மாற்றிவிட்டார்கள். கருவிலிருக்கும் குழந்தையும் வாக்குறுதி அளிக்கும் தந்தையும் என்கிற கதைக்கு பொருத்தமான டைட்டில் தானே..?

உனக்கென்ன வேணும் சொல்லுடெய்சி