சி.வி.குமார் தயாரிப்பில் மீண்டும் விஜய்சேதுபதி – நலன் குமாரசாமி…!

விஜய்சேதுபதியின் சினிமா கேரியரில் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டேயின்மென்ட் நிறுவனத்துக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. பீட்சா, சூதுகவ்வும் என அவரது இரண்டு மாஸ்டர் பீஸ்களும் இங்கிருந்து உருவானது தான். சில மாதங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சி.வி.குமார் தயாரிக்கும் ‘இறைவி’ படத்திலும் மூன்றாவதாகவும் ஒப்பந்தமானார்.

இப்போது சி.வி.குமாரின் 14 தயாரிப்பாக உருவாகும் புதிய படத்திலும் நான்காவது முறையாக இணைகிறார். இந்தப்படத்தை இயக்குவதும் ‘சூதுகவ்வும்’ நலன் குமாரசமிதான். மடோனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சி.வி.குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கி இருக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

இறைவிசி வி குமார்சூதுகவ்வும்நலன் குமாரசாமிபீட்சாவிஜய்சேதுபதி