“க்யூப் நெருக்கடி இனி இருக்காது.” – ‘54321’ விழாவில் தாணு அறிவிப்பு..!

கார்த்திக் சுப்புராஜின் சிஷ்யர் ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள த்ரில்லர் படம் தான் ‘54321’. புதுமுகம் ஆர்வின் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தாணு, இயக்குனரின் திறமையை பாராட்டியதோடு சமீபகாலமாக சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கும் படங்களை தியேட்டர்களில் திரையிடும் க்யூப் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள கட்டணத்தொகை சம்பந்தமான பிரச்சனையை பேசி முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதன்படி சிறிய படங்களுக்கு இனி 3௦௦௦ ரூபாயில் இருந்து 5௦௦௦ ரூபாய்க்குள் கட்டணம் செலுத்தினால் போதுமானது என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

54321தாணு