வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘நாகா’ ஆகிய இரு படங்களையும் லாரன்ஸ் இயக்கி நடிக்கிறார்.. இந்தப்படங்களின் அறிமுக விழாவில், மறைந்த மாமேதை அப்துல் கலாம் கண்ட கனவை நிறைவேற்றும் விதமாக கல்வி, மருத்துவம், மரம் நடுதல் என மக்களின் நலத்திட்ட உதவிகளை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்..
சொன்னதோடு மட்டுமல்ல… இவ்விழாவில் வேந்தர் மூவிஸ் நிறுவனம் அளித்த முன்பணம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கனவு நனவாக அளிப்பதாகவும் தெரிவித்தார் லாரன்ஸ்.
இதுபற்றி லாரன்ஸ் கூறும்போது, “தமிழகத்தில் 100 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களூக்கு ஒரு லட்சம் கொடுக்கப் போகிறேன். கேரளாவைப் போல் தமிழகமும் பச்சைப்பசேல் என்று ஆக வேண்டும். நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அப்துல் கலாம் கனவு கண்ட மரம் நடுதல், கல்வி, மருத்துவ உதவிகளுக்கு நான் வழங்கும் இந்த தொகை பயன்படும்” என்று தெரிவித்தார்.