“வீரப்பனை கடத்த திட்டமிட்டேன்” ; அதிரடி தகவலை வெளியிட்ட சூரி..!

விவேக், வடிவேலு அலை ஓய்ந்துவிட்ட நிலையில், சந்தானம் ஹீரோவாக மாறிவிட்ட நிலையில் இன்று காமெடி உலகில் தனி ஆளாக ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறார் நடிகர் சூரி.. பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சூரிக்கு வரும் வெள்ளியன்று அவர் நடித்த ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படம் வெளியாக இருக்கிறது..

இந்தநிலையில், சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டதையும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இதுநாள் வரை இருந்துவரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சூரி பழைய நினைவுகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்..

தான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலத்தில் சென்னையில் தான் வசித்துவந்த தெருவில் விசேஷ நாட்களில் நாடகம் போட்ட கதையையும் கூறினார்.. அந்த நேரத்தில் வீரப்பன் விவகாரம் பரபரப்பாக இருந்ததால், தான் எழுதிய நாடகம் ஒன்றில் தற்கொலைக்கு முயலும் நான்கு இளைஞர்கள், அதற்குமுன் நாட்டின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக ஒரு ஆளை கடத்த திட்டமிடுவார்களாம்.. அவர்கள் அப்படி கடத்த திட்டமிட்டது யாரை தெரியுமா..? கடத்தல் மன்னன் வீரப்பனைத்தான்.

ஆனால் அதை ஸ்கிரிப்ட்டில் மாரப்பன் என மாற்றிவிட்டாராம் சூரி.. மாரப்பனை கடத்திவந்தபின், அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் வைப்பதாக நாடகம் போகுமாம். அந்த நாடகம் நடத்தி முடிந்ததும், அதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் சூரியை நெருங்கி அவரிடம் 400 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து பாராட்டி சென்றாராம்.. அதுதான் நடிப்பிற்காக தான் வாங்கிய முதல் ஊதியம் என கூறி நெகிழ்ந்தார் சூரி.

SooriVeerappanசூரிவீரப்பன்