நடிகர் குமரிமுத்து உடல்நலகுறைவு காரணமாக இன்று காலமானார்.. நகைச்சுவை நடிகர்களில் நடிகர் குமரிமுத்துவுக்கு தனி இடம் உண்டு.. தனது தனித்துவமான சிரிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த அவர் குணச்சித்திர பத்திரங்களிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர்.. மேடை நாடகத்தில் இருந்து படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 500 படங்களுக்கும் குறையாமல் நடித்துள்ளார் குமரித்து.
நடிகர்சங்க செயல்பாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்திய குமரிமுத்து தான், நடிகர் சங்க கட்டத்ததை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததை முதல் ஆளாய் எதிர்த்து குரல் கொடுத்தவர்.. அந்த குரல் தான் இன்றைய இன்றைய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகம் பொறுப்புக்களை ஏற்றதற்கு அச்சாரமாக, ஆணிவேராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.