ஏப்ரலுக்குள் ஆர்யாவுக்கு திருமணம்..? ; கலர்ஸ் டிவி வெளியிட்ட தகவல்..!

இன்று மாலை 7 மணிக்கு தனது ஒளிபரப்பை துவக்கியுள்ளது கலர்ஸ் தமிழ் சேனல். எற்கனவே கலர்ஸ் இந்தி, கன்னடத்தில் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவில் கேபிள் விநியோகத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு கொஞ்சம் லேட்டாகத்தான் வருகிறார்கள் என்றாலும் அதில் துளியும் வருத்தம் இல்லையாம்.

காரணம் எப்படி வருகிறோம், என்ன விஷயங்களை கொடுக்க போகிறோம் என்பது தான் முக்கியம். என்கிறார்கள். வழக்கமான சீரியல்களில் இருந்து வேறுபட்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம். பிராந்திய மொழி சேனல்களில் இது ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். இந்தியாவின் சிறந்த சேனலாக கலர்ஸ் தமிழ் இருக்கும். தற்போது சேனலில் செய்திகள் இல்லை, திரைப்படங்களை 4 மாதங்கள் கழித்து வாங்குவோம். திரைத்துறையில் சின்ன படங்களுக்கு உதவுவது குறித்தும் முடிவுகள் எடுப்போம் என்கிறார்கள்..

“எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மிகவும் தயக்கத்தோடு ஆர்யாவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டேன். அவர் தயாராக இருக்கிறேன் என ஒரு அறிவிப்பு கொடுத்தவுடன் 70000 அழைப்புகள் வந்தன. 6000 பேர் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தார்கள். அதிலிருந்து ஒரு 18 பேரை தேர்வு செய்து நிகழ்ச்சியை உருவாக்கி வருகிறோம். இதை உண்மையான நிகழ்ச்சியாக உருவாக்கி, உணர்வுப் பூர்வமாகவே கையாண்டிருக்கிறோம். எப்ரல் இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் ஆர்யா” என்றார் கலர்ஸ் பிஸினஸ் ஹெட் அனூப் சந்திரசேகரன்.

கலர்ஸ் தமிழ் நிறைய நல்ல நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட, நம்ம ஊரில் கலருக்கு இருக்கும் முக்கியத்துவம் அதிகம். பேசும்போதும், வாழ்க்கையிலும் அதிகம் கலரை நாம் கொண்டாடுகிறோம். நம்ம ஊரு கலரு என்பதை கலர்ஸ் தமிழின் ஸ்லோகனாக தான் பார்க்கிறோம் என்றார் தீபன் ராமச்சந்திரன்.

நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கோம். இது ஒரு தொடக்கம் தான், இன்னும் நிறைய வர இருக்கிறதுகலர்ஸ் தமிழ் தமிழ்நாட்டில் ஒரு முன்னுதாரணமான சேனலாக அமையும் என நம்புகிறேன் என்றார் மார்க்கெட்டிங் ஹெட் முத்து.

AryaColors Tvஆர்யாகலர்ஸ் டிவி