ஆகஸ்ட் 17ல் கோலமாவு கோகிலா ரிலீஸ்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பாப்பது கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டைதான்.. ரசிகர்கள் மட்டுமல்ல வர்த்தகர்களும் கூட ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிபு வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது” என்றார்.

அனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.

COCONayantharaகோகோநயன்தாரா