தலைப்பை படித்ததுமே இது என்னடா என குழம்பவேண்டாம்.. ஷிவ்ராஜ் இயக்கத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அடிதடி’. தற்போது மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ என்கிற பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது.
இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகியபோது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.
இதில் ஹைலைட் என்னவென்றால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.