குழந்தைகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் ‘கே.கே’ படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகிறது

ரெட்டச்சுழி, சாட்டை திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யுவராஜா “கெளுத்தி” என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து திரைக்கு வர தயாராகிவருகிறது, இவர் அடுத்தபடியாக குழந்தைகளின் வாழ்வியலை கதைக்களமாக கொண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார்.

கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கே.கே’ (KK)0 என்று பெயரிட்டுள்ள திரைப்படத்தின் FIRST SINGLE -ஐ இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்பாடலை இயக்குனர் யுவராஜா எழுத, ஜித்தின் K ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் Champions ரிஹானா மற்றும் சர்வேஷ் பாடி அசத்தியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் பேபி.சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாய் களமிறங்க முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னனி நடிகர்கர்கள் நடிக்க உள்ளனர்.

பாலா மற்றும் மயில் ஒளிப்பதிவாளராகவும், சசிதக்ஷா எடிட்டிங்கை கவனித்து வருகின்றனர்.

திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலை நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்து செவகாட்டு சீமையிலே என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் குரு பாடியுள்ளார்.

actor and director yuvarajaKKkk movie first single releaseKollywood Newstamil movie kk