தனக்கு வாய்ப்பு கிடைத்ததையே டைட்டிலாக மாற்றிய இயக்குனர்..!

நகரில் ஆங்காங்கே வரும் செப்-11ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக, ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என வித்தியாசமாக படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து இது என்னடா புது டைட்டில் என பலரும் குழம்பித்தான் போயிருப்பார்கள்.. ஆனால் ரொம்பவெல்லாம் குழம்ப வேண்டாம்.. படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை..

இந்தப்படத்தை இயக்கியுள்ள ராஜேஷ்குமார் நாளைய இயக்குனர் சீசன்-2 வின்னர்.. ஐடி கம்பெனியில் வேலைபார்த்த இவருக்கு ‘சிக்கி’ என்கிற பட்டப்பெயரும் உண்டு. அதனால் தான் இவருக்கு படம் இயக்க வாய்ப்பு சிக்கியதும், அதையே ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என டைட்டிலாக வைத்துவிட்டாராம்..

படம் முழுக்க ரயிலிலேயே நடக்கும் கதையாம். சென்னையில் ஒருநாள்’ மிதுன், ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவனும் முழுப்படத்தையும் கலகலப்பாக கொண்டு செல்ல உத்தரவாதம் தருகிறார்களாம். இந்தப்படத்தின் கதை பிடித்துப்போனதால்தான், ஸ்டுடியோ-9 சுரேஷ் இந்தப்படத்தை தானே முன்வந்து வெளியிடுகிறாராம்.

சிக்கிக்கு சிக்கிக்கிச்சுமிதுன்ராஜேஷ்குமார்