‘சென்னை-28 பார்ட்-2’ நாளை 400 தியேட்டர்களில் மெகா ரிலீஸ்..!


இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு நாளைய தினம் ஒரு அக்னி பரீட்சையாகவே இருக்கும்.. ஆமம். சென்னை-28 மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்து, மங்காத்தா படம் மூலம் மாஸ் இயக்குனர் ஆனவர் வெங்கட் பிரபு.. அதன்பின் வெளியான வெங்கட் பிரபு படங்கள் இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால், அவர் மீண்டும் தன்னை நிரூபித்தாக வேண்டிய தேர்வுக்கு தயாரானார்..

தனக்கு வெற்றியும் அடையாளமும் கொடுத்த சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதே நடிகர்கள் குழுவை வைத்து வெற்றிகரமாக இயக்கி முடித்து நாளை படத்தை ரிலீசும் செய்கிறார். தமிழகம் முழுவதும் சுமார் 400 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகிறது. ஒரு வெற்றிப்படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் ஒரு பேச்சு பரவி வருகிறது.

chennai 28 part IIJaiVengat PrabhuYuvan Shankar Raja