10ஆம் வருட கொண்டாட்டத்தில் ‘சென்னை-28’..!

அறிமுகமே இல்லாத சின்னச்சின்ன நடிகர்களை வைத்து கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் ஒரு வெற்றிப்படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.. அதேபோல வெற்றி பெற்றபின், முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் அதேவிதமாக ரசிகர்களை ரசிக்க வைப்பதில் தான் அந்தப்படத்தின் வெற்றியே அடங்கி இருக்கிறது..

அந்தவகையில் சென்னை-28 முதல் பாகத்திலும் சரி கடந்த வருடம் வெளியான அதன் இரண்டாம் பாகத்திலும் சரி ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ, அதை சரியாக நிறைவேற்றி இருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு.. வெற்றிகரமாக பத்து வருடங்களை கடந்து இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது ‘சென்னை-28’ பட நினைவுகள்.

Chennai 28Vengat Prabhuசென்னை-28வெங்கட் பிரபு